/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டி பரிசளிப்பு பரிசளிப்பு விழா
/
கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டி பரிசளிப்பு பரிசளிப்பு விழா
கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டி பரிசளிப்பு பரிசளிப்பு விழா
கூட்டுறவு வார விழா விளையாட்டு போட்டி பரிசளிப்பு பரிசளிப்பு விழா
ADDED : நவ 22, 2025 04:53 AM

கள்ளக்குறிச்சி: கூட்டுறவு வாரவிழாவையொட்டி கூட்டுறவு பணியாளர்கள் மற்றும் சங்க அலுவலர்களுக்கு நடந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், ரத்த தான முகாம், உணவுத்திருவிழா நடத்தப்பட்டது.
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டி நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் போட்டிகளை துவக்கி வைத்தார். சார் பதிவாளர் வேல்முருகன் போட்டியை ஒருங்கிணைத்தார்.
ஆண் மற்றும் பெண்களுக்கு தனி, தனியாக கபடி, கோ கோ, பேட்மிட்டன், ஓட்டப்பந்தயம், வாலிபால், ரிங் பால், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர்கள் ரகு, குறிஞ்சி மணவாளன், சாந்தி, விஜயகுமாரி, பள்ளி தலைமை ஆசிரியர் திருஞானசம்பந்தம்.
கூட்டுறவு சார் பதிவாளர்கள் சண்முகவேல், முருகானந்தம், கமலகண்ணன், நிர்மல், சசிகலா, பிரியதர்ஷினி, சவிதாராஜ், பிரபா, இந்துமதி, அப்ரின்பானு, ராமச்சந்திரன், மீனாட்சி, தமிழ்செல்வி, சக்திவேல், மணிகண்டன், கிரண்குமார், கள அலுவலர் மனோன்மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டுறவு ஒன்றியங்களின் செயலாட்சியர் செல்வராசு நன்றி கூறினார்.

