ADDED : ஏப் 05, 2025 04:47 AM

ரிஷிவந்தியம்: பகண்டைகூட்ரோட்டில் தி.மு.க., ஆட்சியில் மக்கள் நலன் சார்ந்த பணிகள் தரமற்ற முறையில் நடைபெறுவதாக கூறி, அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் மோகன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பிரபு, அழகுவேலுபாபு, முன்னாள் எம்.பி., காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் கதிர்தண்டபாணி, துரைராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் அருணகிரி வரவேற்றார்.
மாவட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து நடைபெறும் பணிகள் ஆதாய நோக்கத்துடன், தரமற்ற முறையில் நடைபெறுவதாகவும், அரசு பணிகளை தரமாக செய்யவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
இதில், மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, ஒன்றிய செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ், அரசு இளந்தேவன், ராஜேந்திரன், ராஜாராம், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, ராஜசேகர், அய்யம்பெருமாள், நகர செயலாளர்கள் ரமேஷ், சுப்பு, ஷியாம்சுந்தர், ராகேஷ், பிற அணி மாவட்ட செயலாளர்கள் ஞானவேல், சதீஷ்பாண்டியன், பாக்யராஜ், கிருஷ்ணமூர்த்தி, ஜான்பாஷா, ரிஷிவந்தியம் ஒன்றிய நிர்வாகிகள் சின்னராஜ், வைத்தியநாதன், சந்திரசேகரன், சத்தியமூர்த்தி, சண்முகம், குபேந்திரன், கதிர், அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

