/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல்
/
பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல்
பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல்
பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல்
ADDED : செப் 25, 2025 05:01 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சியில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த 'ஏர் ஹாரன்களை' பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் ஏராளமான பஸ், லாரிகளில் தடை செய்யப்பட்ட 'ஏர் ஹாரன்கள்' பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து வரும் அதிக ஒலி பயணிகளின் காதுகளை செவிடாக்குகிறது. ஒலி மாசு ஏற்படுத்தும் ஏர் ஹாரன்களை தடுக்க பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அதன்பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் ஆகியோர் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு மற்றும் தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள ஏர் ஹாரன்களின் சத்தத்தை டெசிபல் மீட்டர் கருவி மூலம் பரிசோதித்தனர். இதில், 90 டெசிபலுக்கும் அதிகமாக சத்தம் எழுப்பிய 7 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்து, டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.