/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஏ.ஐ.டி.யூ.சி., கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..
/
ஏ.ஐ.டி.யூ.சி., கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..
ADDED : அக் 09, 2025 02:20 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருண், தொழிற்சங்க நிர்வாகி முனுசாமி, காமராஜ் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாக குழு உறுப்பினர் வளர்மதி கோரிக்கை வலியுறுத்தி பேசினார்.
மருத்துவத்துறை பணியாளர் கூட்டமைப்பு கவுரவ தலைவர் ரவீந்திரநாத், துாய்மை பணியாளர் சங்க மாநில தலைவர் செல்வராஜ் கண்டன உரையாற்றினர்.
இதில் தொழில் வளர்ச்சி உற்பத்தியில் தொழிலாளர்களுக்கு உரிய பங்கு தர வேண்டும். தொழிலாளர் கொள்கை அமைக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் புதிய தொகுப்பு சட்டங்களை கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் நிர்வாகிகள் கோவிந்தராஜ், அப்பாபு, சின்னையன், ஆரோக்கியதாஸ், அந்தோணிசாமி, ஜெயராஜ், தனசெல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.