/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் புறவழிச்சாலையில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
/
தியாகதுருகம் புறவழிச்சாலையில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
தியாகதுருகம் புறவழிச்சாலையில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
தியாகதுருகம் புறவழிச்சாலையில் குடிநீர் கேட்டு சாலை மறியல்
ADDED : அக் 09, 2025 02:19 AM

தியாகதுருகம்: பிரதிவிமங்கலத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தியாகதுருகம் புறவழி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தியாகதுருகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரதிமங்கலம் குடியிருப்பு பகுதியில் ரிஷிவந்தியம் கூட்டுக் குடிநீர் கடந்த சில வாரங்களாக கிடைக்கவில்லை. தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் உள்ள நீர் உந்து நிலையத்திலிருந்து பிரதிவிமங்கலம் செல்லும் குழாயில் பழுது ஏற்பட்டதால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது.
இதை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.
பழுது சரிசெய்யப்படாததால் கோபமடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தியாகதுருகம் புறவழி சாலையில் நேற்று காலை 8:00 மணிக்கு காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக தியாகதுருகம் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதை ஏற்று 8:30 மணிக்கு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் புறவழிச்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.