ADDED : அக் 16, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த தொட்டியம் பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை 10.15 மணிக்கு அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் தொட்டியம் மடத்து காடு பாலம் அருகே மதுபாட்டில் விற்பனை செய்த, மண்மலை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் ஆறுமுகம்,41; என்பரை பிடித்து வழக்குப் பதிந்து கைது செய்தனர்.