/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் பாராட்டு விழா
/
அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் பாராட்டு விழா
ADDED : ஜூலை 07, 2025 02:27 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் வட்ட பேரவை பாராட்டு விழா நடந்தது.
வட்டத்தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் செல்லமுத்து, திருவேங்கடம், மாவட்ட செயலாளர் கேசவராமானுஜம், மாவட்ட பொருளாளர் பாசுகரன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, உளுந்துார்பேட்டையில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்.
மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகோபால், தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், கருவூல அலுவலர்கள் தனசேகரன், வீரக்கண்ணு, மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்டத் தலைவர் மோகன், மாவட்டத் துணைத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, முத்துசாமி, சாந்தி, மாவட்ட இணை செயலாளர் பாவாணன், சட்ட ஆலோசகர் வேலாயுதம் பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்ட இணை செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.