UPDATED : அக் 27, 2026 03:38 PM
ADDED : அக் 27, 2026 03:36 PM

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அடுத்த வி.புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 2005–06ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பில் பள்ளி வளாகத்தில் நடந்த நிக்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் காமராஜ் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பிரபா, செந்தில்ராஜ், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் விருத்தகிரி வரவேற்றார்.
முன்னாள் மாணவர்கள் அனைவரும் பங்கேற்று தங்கள் பள்ளி பருவ நிகழ்வுகள் குறித்து நினைவு கூர்ந்தனர். பள்ளியின் வளர்ச்சிக்கு தங்களால் இயன்ற உதவியை செய்வது குறித்து உறுதி எடுத்துக் கொண்டனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்த இந்நிகழ்வு நெகிழிவுடன் அரங்கேறியது. முன்னாள் மாணவர் ஐயப்பன் நன்றி கூறினார்.
