ADDED : ஜன 27, 2026 05:10 AM

அ நிறம் | அளவு
மூங்கில்துறைப்பட்டு: ஜன. 27-: மூங்கில்துறைப்பட்டு கே.சி.எஸ்.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2004ம் ஆண்டு பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் மாணவர்கள் ஆரோக்கியசாமி, தமிழரசி, மனோதீபன் ஆகியோரின் ஏற்பாட்டின் மூலம் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பல மாநிலங்கள் வெளிநாடுகளில் வேலை செய்து வரும் மாணவர்களை ஒன்றிணைத்து அவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளையை உருவாக்கி அவற்றில் வரும் பணத்தின் மூலம் படித்த பள்ளிக்கு உதவிகள் செய்ய முடிவு செய்தனர். மாணவர்கள் பழைய நினைவுகளை பரிமாறிக் கொண்டனர். மாணவர்களின் குடும்பத்தினர் குழந்தைகள் கலை நிகழ்ச்சி நடந்தது.
