/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
/
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
ADDED : ஜன 27, 2026 05:10 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் எத்திராஜிலு மகன் ரமேஷ், 42; இவர், தனது விளைநிலத்தில் அரசு திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டிற்கு மின் இணைப்பு பெறவில்லை. இதனால் இரவு நேரங்களில் விளை நிலத்தில் உள்ள மின் கம்பத்தில் இருந்து கொக்கி மூலம் மின்சாரம் எடுத்து வீட்டில் லைட் எரிய வைப்பது வழக்கம்.
கடந்த 24ம் தேதி கொக்கி போட்டு மின்சாரம் எடுக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக ரமேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

