/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது
/
சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கைது
ADDED : ஜன 07, 2026 06:20 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சியம்மாள் தலைமை தாங்கினார். 10 வருடம் பணி முடித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி வரைமுறைப்படுத்துதல், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவித்தல், ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், சி.ஐ.டி.யூ., மாவட்ட ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் விஜய குமார், ஏழுமலை, மோகன், கந்தசாமி, துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு, கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
இன்ஸ்பெக்டர் உசேன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 145 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

