/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
ADDED : ஜன 07, 2026 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சட்ட நகலை கிழித்தெரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., அலுவலகத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கொளஞ்சி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன், பொருளாளர் சுதா, உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை செயலாளர் பழனி கண்டன உரையாற்றினார்.
நுாறு நாள் வேலை திட்டத்தில் விவசாய வேலை நடைபெறும் காலங்களில் வேலை தர தேவையில்லை, தினசரி இரு வேலை பயோமெட்ரிக் வ ருகை பதிவேடு மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரானது என கூறி, சட்ட நகலை மாற்றுத்திறனாளிகள் கிழித்தெறிந்து போராட்டம் செய்தனர்.

