/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 21, 2025 11:30 PM

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளளர் பிரேமா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கலா, துணைச் செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் விஜியகுமார், செயலாளர் செந்தில் ஆகியோர் பேசி னர். இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பங்கேற் றனர்.
ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி மைய பணிகளை செய்வதற்கு 5ஜி மொபைல், 5ஜி சிம் கார்டு வழங்க வேண்டும். அந்தந்த கிராமத்தில் நெட் வொர்க்கிற்கு ஏற்ப சிம் கார்டு வழங்க வேண்டும்.
அங்கன்வாடி மையத்தில் வைபை இணைப்பு வழங்க வேண்டும். பயனாளிகளுக்கு சத்து மாவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ முறையை கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.