/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
லஷ்மி கல்லுாரியில் ஆண்டு விழா
/
லஷ்மி கல்லுாரியில் ஆண்டு விழா
ADDED : ஏப் 09, 2025 08:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.
லஷ்மி ைஹகிரிவாஸ் கல்வி அறக்கட்டளை அறங்காவலர் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், பொருளாளர்கள் சாந்தி, சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன் ஆண்டறிக்கை வாசித்தனர்.
சிறப்பு அழைப்பாளர் பட்டிமன்ற பேச்சாளர் தெய்வானை சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. துணை முதல்வர் சசிகலா நன்றி கூறினார்.