sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி

/

மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி

மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி

மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி


ADDED : செப் 29, 2024 06:00 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் இறந்ததால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார், 21; டிரைவர். இவர், மகேந்திரா மேக்ஸ் கேப் வேனில் அப்பகுதியைச் சேர்ந்த 23 பேரை ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலாவாக கடந்த 23ம் தேதி அழைத்துச் சென்றார்.

திருச்செந்துார் கோவிலுக்கு சென்று திரும்பி வந்த போது, கடந்த 25ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார் பேட்டை அடுத்த செரத்தனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.

இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த 16 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு வெங்கடேசன் மனைவி தனம், 50; இறந்ததால் பலி எண்ணிக்கை 7ஆனது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுப்ரமணியன், 79; நேற்று இறந்தார். இதனால் வேன் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.






      Dinamalar
      Follow us