/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
/
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : அக் 29, 2025 11:31 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்.27 முதல் நவ.2 வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது. கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலங்களில் அரசு அலுவலர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நாள் உறுதிமொழி ஏற்றனர்.
அதனைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசு பணியாளர்களுக்கு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி., சத்யராஜ் தலைமை தாங்கினார். இதில் ஊழல் மற்றும் தடுப்பு சட்டங்கள் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்டனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
கூட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அருண்ராஜ் மற்றும் அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

