/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

ADDED : நவ 20, 2025 05:39 AM

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பிந்து முன்னிலை வகித்தார். துணை முதல்வர் ஜான்விக்டர் வரவேற்றார். மது, குட்கா, சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாவதால் ஏற்படும் பிரச்னைகள், உடல் நலன் பாதிப்பு, குடும்ப சூழல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, போதைப்பொருட்களுக்கு அடிமையாக மாட்டோம், மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. போதைப்பொருட்கள் பயன்பாடு தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், உதவி பேராசிரியர் கோமதி மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் தங்கவேலு நன்றி கூறினார்.