/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதைப் பொருள் ஒழிப்பு ஊர்வலம்
/
போதைப் பொருள் ஒழிப்பு ஊர்வலம்
ADDED : மார் 15, 2024 11:34 PM

கள்ளக்குறிச்சி: பங்காரம் லட்சுமி கல்லுாரி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தியாகதுருகம் மற்றும் ரிஷிவந்தியம் பகுதியில் நடந்த ஊர்வலத்திற்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், பொருளாளர் சாந்தி, இயக்குனர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
தியாகதுருகத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், செல்வம் ஆகியோர் ஊர்வலத்தைத் துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் சிராஜூதீன் வரவேற்றார். அதேபோல் ரிஷிவந்தியம் ஊராட்சியில் நடந்த ஊர்வலத்தை ஊராட்சி தலைவர் வனிதா மகேந்திரன் துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில், சப் இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், துர்காதேவி, சம்பத் பங்கேற்றனர். தொடர்ந்து கல்லுாரி மாணவ, மாணவிகள் முக்கிய சாலைகளின் வழியாகச் சென்று போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லுாரி துணை முதல்வர்கள் சக்திவேல், சசிகலா மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

