/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஏப் 23, 2025 05:59 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எஸ்.பி. அலுவலக செய்திகுறிப்பு:
மாவட்டத்தில் நடப்பாண்டு ஊர்க்காவல் படையில் 24 காலி பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். உயரம் ஆண்கள் 167 செ.மீ., பெண்கள் 157 செ.மீ., இருக்க வேண்டும். எவ்வித குற்ற வழக்கிலும் ஈடுபடாமலும் ஜாதி, மத, அரசியல் மற்றும் சங்கங்களில் உறுப்பினராக இருக்கக் கூடாது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வரும் 29ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலினை செய்து மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு பணி அமர்த்தப்படுவர். மாதத்திற்கு 5 நாட்கள் பணி வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 560 ரூபாய் வழங்கப்படும்.
விண்ணப்பம் செய்பவர்கள் அரசு ஊழியராக இருந்தால், அவர் துறை அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வயது 20 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

