/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
/
பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 04, 2025 01:32 AM
கள்ளக்குறிச்சி :மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி விடுதிகளில் சேர்ந்து பயில மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு 14 பள்ளி விடுதிகள், 4 கல்லுாரி விடுதிகள், மாணவியர்களுக்கான 9 பள்ளி விடுதிகள் என மொத்தம் 27 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில், 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையும், கல்லுாரி விடுதிகளில் பட்டபடிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகள் பயிலும் மாணவ, மாணவியர் சேரலாம்.விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் துாரம் குறைந்தபட்சம் 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும்.
தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளி விடுதிக்கு வரும், 18 ம் தேதி, கல்லாரி விடுதிக்கு வரும் ஜூலை 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விடுதியில் சேரும்போது சாதி மற்றும் ஆண்டு வருமான சான்றிதழ் அளித்தால் போதும். மேலும் ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் விடுதியினை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.