/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா
/
தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா
ADDED : செப் 11, 2025 10:56 PM

சங்கராபுரம்; சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாகிருஷ்ணன், தணிக்கையாளர் சக்கரவர்த்தி, மோட்டார் வாகன சங்க தலைவர் திருவேங்கடம் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் முத்துகருப்பன் வரவேற்றார்.
சங்கைத் தமிழ்ச் சங்கத் தலைவர் சுப்ராயன், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் உருவ படத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியை பேரூராட்சி தலைவர் ரோஜரமணி துவக்கி வைத்து பேசினார்.
விழாவில் தமிழ் கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் மூலம் ஆசிரியர் செம்மல் விருது பெற்ற புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் கவுரவிக்கப்பட்டார்.
இன்னர் வீல் கிளப் தலைவி இந்துமதி, தீபாசுகுமார், அரிமா மாவட்ட தலைவர் வேலு, ரகுநந்தன், மூர்த்தி, அரசம்பட்டு திருவள்ளூர் தமிழ் சங்க தலைவர் சவுந்தராஜன், திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, தமிழ்படைப்பாளர் சங்க செயலாளர் சக்திவேல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
வள்ளலார் பள்ளி தலைமையாசிரியை குமாரி நன்றி கூறினார்.