ADDED : மே 14, 2025 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார், ரோட்டரி கிளப் சார்பில், அரசு மருத்துவமனை செவிலியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி திருக்கோவிலூர் ரோட்டரி கிளப் சார்பில் நடந்தது.
சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கி, செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.
தலைமை மருத்துவர் ராஜா சுப்பிரமணியம், ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் வாசன், செயலாளர் கோதம் சந்த், உறுப்பினர் முத்துசாமி, முன்னாள் ராணுவ வீரர் கல்யாண் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.