sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி மையங்களில் கட்டண சலுகைக்கான திறனறி தேர்வு

/

ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி மையங்களில் கட்டண சலுகைக்கான திறனறி தேர்வு

ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி மையங்களில் கட்டண சலுகைக்கான திறனறி தேர்வு

ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி மையங்களில் கட்டண சலுகைக்கான திறனறி தேர்வு


ADDED : மார் 25, 2025 07:47 AM

Google News

ADDED : மார் 25, 2025 07:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி மையங்களில், 100 சதவீத கட்டண சலுகைக்கான திறனறி தேர்வு நாளை நடக்கிறது.

ஏ.கே.டி., நீட் பயிற்சி மைய இயக்குனர் ஷ்ரவன்குமார் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி மையங்களில், 100 சதவீத கட்டண சலுகையில் சேர்க்கை பெறுவதற்கான திறனறி தேர்வு நாளை 26ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

இந்த தேர்வு கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளி, திருக்கோவிலுார் கனரா வங்கி அருகே உள்ள ஜே.எஸ்.கே., காம்ப்ளக்ஸ், விருத்தாசலம் ஏ.ஆர்.எஸ்., மகால் அருகே உள்ள மையங்களில் நடக்கிறது.

அரசு பள்ளியில் ஆங்கில வழி பயின்று, 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு நீட் மறுதேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தற்போது படிக்கும் ரெகுலர் மாணவர்களும் தேர்வில் பங்கேற்கலாம்.

இத்தேர்வு எழுத 63691 46590, 888835 96437, 93611 65429 ஆகிய எண்களில் முன்பதிவு செய்ய வேண்டும். ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி வகுப்பு மூலம் இதுவரை அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் 636 பேர் மருத்துவ சேர்க்கை பெற்றுள்ளனர். இங்கு படிக்கும் மாணவர்கள் மாவட்ட அளவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்றனர்.

ஏ.கே.டி., பள்ளி நீட் பயிற்சி வகுப்பு நேரடி நிர்வாகம் மூலம் தென்னிந்திய ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. நீட் பாடத்திட்டத்தின் முழுமையான கையேடுகள், முந்தைய நீட் தேர்வு வினாக்களுக்கான விளக்கங்கள் மற்றும் மாணவர்களுக்கான சந்தேகங்களை தீர்க்கும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். நீட் கிராஷ் பயிற்சி நாளை 26ம் தேதி துவங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us