/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மூங்கில்துறைப்பட்டில் ஆயுதம் ஏந்திய போட்டி
/
மூங்கில்துறைப்பட்டில் ஆயுதம் ஏந்திய போட்டி
ADDED : அக் 01, 2025 11:13 PM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் ஆயுதபூஜை முன்னிட்டு வீரம் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ஆயுதம் ஏந்திய போட்டிகள் நடந்தன.
மாணவர்களுக்கு மான் கொம்பு, கத்தி, சுருள், வால், பிச்சுவா, சக்கரபானம், சிலம்பம், ஸ்டார் சிலம்பம், சங்கிலி குண்டு, லப்பர் பந்து ஆகியவற்றினை ஒவ்வொரு மாணவராக கையில் எடுத்து போட்டியை எதிர்கொண்டனர். மூன்று சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பயிற்சியாளர்கள் அண்ணாமலை, ஜான் வின்சென்ட் ராஜ், அய்யப்பன், சக்திவேல், விக்கி ஆகியோர் உடனிருந்தனர். சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் கோகுல்ராம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.