/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புதுப்பட்டில் வேகத்தடை பொதுமக்கள் கோரிக்கை
/
புதுப்பட்டில் வேகத்தடை பொதுமக்கள் கோரிக்கை
ADDED : அக் 01, 2025 11:13 PM

மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டில் வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுப்பட்டில் அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒரே இடத்தில் அருகே அருகே அமைந்துள்ளதால் அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். காலை மாலையில் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர்.
இதனால் புதுப்பட்டு இருந்து சேராப்பட்டு செல்லும் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி செல்லும் வழியில் சாலையின் இரு புறங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் மாணவர்களுடன் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.