/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் கலை திருவிழா போட்டி துவக்கம்
/
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் கலை திருவிழா போட்டி துவக்கம்
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் கலை திருவிழா போட்டி துவக்கம்
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் கலை திருவிழா போட்டி துவக்கம்
ADDED : செப் 18, 2025 11:00 PM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் கலைத் திருவிழா போட்டிகள் துவக்க விழா நடந்தது.
கலைத்திருவிழா போட்டிகள் துவக்க விழாவிற்கு கல்லுாரி முதல்வர் தர்மராஜா தலைமை தாங்கி, மாணவர்கள் கலை திருவிழா போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்றார்.
கல்லுாரி கலைத் திருவிழா போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் மோட்சஆனந்தன் பங்கேற்று பேச்சு, கட்டுரை, ஓவியம், வருணனை உள்ளிட்ட 32 போட்டிகளின் விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார். துறை தலைவர்கள் கிருஷ்ணகுமார், முருகானந்தம், வீரலட்சுமி, உமா, உற்கல்வி இயக்குனர் சரவணன், நுாலகர் அசோக்குமார், சங்கீதா வாழ்த்துரை வழங்கினர்.
கலை திருவிழா போட்டிகள் வரும் அக்., 7 ம் தேதி வரை நடக்கிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் விஜயகுமார், நாகராஜன், ஆனந்தகுமார், ஆனந்தி, கற்பனைச் செல்வன், இன்பகனி, வீரப்பன், ராஜ்குமார் செய்து வருகின்றனர்.