நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
விழாவையொட்டி நடராஜ மூர்த்திக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
மகாதீபாரதனைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயம் பள்ளி தாளாளர் சந்திரசேகரன், ரவி குருக்கள், பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் செந்தில்குமார், கணபதி, வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துகருப்பன், அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் உள்ளிட்ட திரான பொதுமக்கள் பங்கேற்றனர்.

