/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை
/
வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை
வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை
வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை
ADDED : அக் 31, 2025 02:38 AM
ரிஷிவந்தியம்:  ரிஷிவந்தியம் பகுதியில் வெள்ள பாதிப்பில் இருந்து நெல் மற்றும் உளுந்து பயிர்களை பாதுகாக்கவேண்டிய நடைமுறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
ரிஷிவந்தியம் வேளாண்மை உதவி இயக்குனர் ஷியாம்சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ரிஷிவந்தியம் பகுதியில்  வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், கனமழை பெய்தால் பயிர்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது. இதனால், காற்றோட்டமின்றி வேர்களின் சுவாசம் பாதித்து, அதனை சுற்றியுள்ள நுண்ணுயிர்களின் செயல்பாடு குறையும். எனவே வயலில் தேங்கியுள்ள கூடுதல் தண்ணீரை உடனே அகற்ற வேண்டும்.
ஏக்கருக்கு ஒரு கிலோ யூரியாவுடன், 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து ஒரு நாள் இரவு வைத்திருக்க வேண்டும். மறுநாள் இதனுடன் 17 கிலோ பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும். பயிரின் வளர்ச்சி அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தால் இலை வழியாக ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ ஜிங்க் சல்பேட்டை 200 லிட்., தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேலைகளில் தெளிக்க வேண்டும்.
ஒரு ஏக்கர் பரப்பளவுக்கு 5 கிலோ நெல் நுண்ணுாட்ட உரக்கலவை 20 கிலோ மணலுடன் கலந்து இட வேண்டும்.அதேபோல், உளுந்து பயிரிட்டவர்கள் சாலிசிலிக் அமிலத்தை (100 பி.பி.எம்.,) ஒரு லிட்டர் தண்ணீரில் 1 கிராம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இதனையடுத்து 2 சதவீத டி.ஏ.பி., கரைசலை காலை அல்லது மாலை வேலையில் பயிரில் தெளிக்கலாம்.
வேளாண் விரிவாக்க மையத்தில்  நெல் ரகங்களா ஏடீடி45 மற்றும் 54, கோ-51 மற்றும் 55, ராபி பருவ உளுந்து ரகங்களான வம்பன் 8, 10 மற்றும் 11, உளுந்து விதைகள், நுண்ணுாட்டங்கள், திரவ உயிர் உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு காரணிகள் உள்ளிட்ட இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

