/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேளாண் உதவி இயக்குநர் அழைப்பு
/
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேளாண் உதவி இயக்குநர் அழைப்பு
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேளாண் உதவி இயக்குநர் அழைப்பு
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வேளாண் உதவி இயக்குநர் அழைப்பு
ADDED : நவ 18, 2025 07:17 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிறப்பு மற்றும் ரபி பருவதிற்கு பயிர் காப்பீடு செய்யலாம்.
சங்கராபுரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஆனந்தன் செய்திகுறிப்பு:
சங்கராபுரம் வட்டாரத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் 2025-26ம் ஆண்டுக்கான சிறப்பு மற்றும் ரபி பருவதிற்கு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு ஈடு செய்து வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரீமியம் தொகையாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு 538 ரூபாய், உளுந்துக்கு 252 ரூபாய் வரை செலுத்தி விவசாயிகள் வரும் 30ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
தேசிய சேவை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், இணைய வழி சேவை மையங்களிலும் பயிர் காப்பீடு செய்யலாம்.
விவசாயியின் பெயர், விலாசம் உள்ளிட்ட விபரங்களை சரியாக பதிவு செய்து காப்பீடு செய்து கொள்ளலாம்.
மேலும் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கலக்கு கொண்டு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

