/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எஸ்.ஐ., பணிக்கான மாதிரி தேர்வு
/
எஸ்.ஐ., பணிக்கான மாதிரி தேர்வு
ADDED : நவ 18, 2025 07:18 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான இலவச மாதிரி தேர்வுகள் நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்விற்கு இலவச மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உதவி ஆய்வாளர் பதவிக்கான 1299 காலிப்பணியிடத்திற்கான தேர்வு வரும் டிசம்பர் 21ம் தேதி நடக்கிறது. இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் பயனடையும் வகையில் இதற்கான இலவச மாதிரித் தேர்வுகள் வரும் 19ம் தேதி 22, 25, 28 மற்றும் டிசம்பர் 2, 5, 9, 12, 16 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணிவரை தமிழ் தேர்வும், மதியம் 2:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பொது அறிவு, உளவியல் பாடத்திற்கும் நடத்தப்படுகிறது.
கள்ளக்குறிச்சி 18/63, நேபால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இத்தேர்வுகள் நடத்தப்படுகிறது.
மேலும், தேர்வின்போது நடப்பு நிகழ்வுகளுக்கான குறிப்புகளும், சுருக்கப்பட்ட பாட குறிப்புகளும் வழங்கப்பட உள்ளது.
இம்மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://forms.gle/EV5RPPperPPKfXg27 என்ற கூகுள் படிவத்தில் பூர்த்தி செய்தோ அல்லது நேரிலோ, புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விபரங்களை இன்று 18ம் தேதி முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு 04151-295422 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்கள் பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

