/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிண்டலை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்
/
கிண்டலை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்
ADDED : மே 08, 2025 01:47 AM
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அருகே கிண்டலை தட்டிக்கேட்டவரை தாக்கிய, 3 வாலிபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வாணாபுரம், அடுத்த சூ.பாலப்பட்டு காட்டுகொட்டாயை சேர்ந்தவர் கண்ணன்,41; இவர் நேற்று முன்தினம் மாலை 4:45 மணிக்கு, சூளாங்குறிச்சியில் உள்ள பெட்ரோல் பங்கில், தனது வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளார். அப்போது, சூளாங்குறிச்சி காலனியை சேர்ந்த மாணிக்கம் மகன் தங்கபாண்டியன், 28; ஏழுமலை மகன் விஷ்ணு,23; பாம்பன் மகன் பரத், 24; ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர், ஒருவரை கிண்டல் செய்துள்ளனர்.
இது குறித்து கேட்ட கண்ணனை, மூன்று பேரும் சேர்ந்து திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தியாகதுருகம் போலீசார் மூவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

