/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
செயின் பறிக்க முயற்சி: வாலிபர் கைது
/
செயின் பறிக்க முயற்சி: வாலிபர் கைது
ADDED : செப் 28, 2025 03:54 AM
கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் வெளியே நின்றிருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அடுத்த சூ.ராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெசி மகள் ஜெர்லின்,19; கோயம்புத்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பார்ம்., முதலாமாண்டு படிக்கிறார். விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் இரவு ஜெர்லின் கோயம்புத்துாரில் இருந்து பஸ்சில் கள்ளக்குறிச்சிக்கு வந்தார்.
இரவு 9.30 மணிக்கு பஸ் நிலையத்திற்கு வெளியே ஜெர்லின் நின்றிருந்த போது, அவ்வழியாக சென்ற மர்ம நபர் ஜெர்லின் கழுத்தில் இருந்த 12 கிராம் தங்க செயினை பறிக்க முயன்றார். ஜெர்லின் கூச்சலிட்டதால், அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து மர்ம நபரை பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட முயன்றது ராணிப்பேட்டை மாவட்டம், வரதராஜபுரத்தை சேர்ந்த கண்ணாயிரம் மகன் தீனா, 25; என தெரியவந்தது. தீனாவை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.