/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கனகனந்தல் ஏரியில் மண் திருட்டு அதிகாரிகள் ட்ரோன் மூலம் ஆய்வு
/
கனகனந்தல் ஏரியில் மண் திருட்டு அதிகாரிகள் ட்ரோன் மூலம் ஆய்வு
கனகனந்தல் ஏரியில் மண் திருட்டு அதிகாரிகள் ட்ரோன் மூலம் ஆய்வு
கனகனந்தல் ஏரியில் மண் திருட்டு அதிகாரிகள் ட்ரோன் மூலம் ஆய்வு
ADDED : ஜன 01, 2026 06:17 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல் பெரிய ஏரியில் நடக்கும் வண்டல் மண் கொள்ளை சம்பந்தமாக கனிமவளத்துறை அதிகாரிகள் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல் பெரிய ஏரியில் பல மீட்டர் ஆழத்திற்கு வண்டல் மண் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் தொடர்ந்து லாரிகளில் வண்டல் மண் எடுத்து செல்லும் சம்பவமும் நடந்து வந்தது. இதனால் ஏரியின் நீர் பிடிப்பு அளவு பாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்படைவதுடன், விவசாயிகளுக்கான தண்ணீர் விநியோகம் தடை ஏற்படுவதாக கூறி வழக்கறிஞர் ராஜி கனிமவளத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார்.
இதன் பேரில் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்பொழுது ட்ரோன் கேமரா மற்றும் நவீன கருவிகள் மூலம் ஏரியில் மண் எடுக்கப்பட்டதை அளவீடு செய்தனர். இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.