/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜன 01, 2026 06:25 AM
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் மரவள்ளி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள புதுப்பாலப்பட்டு, பழைய பாலப்பட்டு, வட பாலப்பட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் மரவள்ளியை சாகுபடி செய்துள்ளனர்.
10 மாத பயிரான மரவள்ளிக்கு குறைந்த பராமரிப்பு செலவு. தோட்டக்கலை துறை மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. அறுவடை சமயத்தில் ஆத்துார், சேலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சேகோ தொழிற்சாலை உரிமையாளர்கள் விவசாய நிலத்திற்கே நேரடியாக வந்து அறுவடை செய்யும் மரவள்ளியை வாங்கி செல்வதால், அலைச்சல் இன்றி உடனடியாக பணம் கிடைக்கிறது. இதனால் மரவள்ளி சாகுடி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

