/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்கில் 'காது சவ்வு கிழியும்' சத்தம்; 'புள்ளிங்கோ' அட்டகாசம்
/
பைக்கில் 'காது சவ்வு கிழியும்' சத்தம்; 'புள்ளிங்கோ' அட்டகாசம்
பைக்கில் 'காது சவ்வு கிழியும்' சத்தம்; 'புள்ளிங்கோ' அட்டகாசம்
பைக்கில் 'காது சவ்வு கிழியும்' சத்தம்; 'புள்ளிங்கோ' அட்டகாசம்
UPDATED : ஜன 01, 2026 01:47 PM
ADDED : ஜன 01, 2026 06:26 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் பொதுமக்களை மிரள வைக்கும் வகையில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களுடன் பைக் ரேஸில் ஈடுபடும் புள்ளிங்கோ ரோமியோக்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருக்கோவிலுாரில் சமீப நாட்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, 'பைக் ரேஸ்' நடந்து வருகிறது. குறிப்பாக இவ்வாறு பைக் ரேஸில் பங்கேற்கும் பைக்குகளில் பழைய சைலன்ஸரை மாற்றி அதிக சத்தம் எழுப்பும், அடிக்கடி பட்டாசு வெடிப்பது போன்ற ஒலி எழுப்பும் சைலன்சர்களை பொறுத்தி கொள்கின்றனர்.
சாலையில் இந்த பைக்குகள் அதிவேகமாக செல்லும்போது, சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் பைக்குகளின் அலரல் சத்தம் கேட்டு அரண்டு ஓடுகின்றனர்.
ஆங்காங்கே வாகன சோதனை என்ற பெயரில், கிராம பகுதிகளில் இருந்து வரும் அப்பாவி மக்களை மடக்கி பிடித்து அபராதம் விதிப்பது, நடவடிக்கை எடுப்பதில் போலீசார் அதீத தீவிரம் காட்டுகின்றனர்.
ஆனால், இது போன்ற ரோமியோக்களின் அட்ரா சிட்டியை கண்டு கொள்வதில்லை என்பது நகர மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இதயம் பலகீனமானவர்களை பயமுறுத்தும் வகையிலான இந்த சைலன்சர்கள் நகரில் இருசக்கர வாகன உதிரி பாகம் விற்கும் குறிப்பிட்ட ஒரு சில கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
பொது மக்களுக்கு இடையூறு செய்கிறோம் என்பதை உணராத இளைஞர்களுக்கு, இதுபோன்ற அதிக ஒலி எழுப்பும் லைசன்சர்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து, போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன், வரும் நாட்களில் விழிப்புடன் இருந்து அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காதை கிழிக்கும், இதயத்தை படபடக்க வைக்கும் ஒலி மாசை கட்டுப்படுத்த முடியும்.

