/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'ஸ்டார்ட் அப்' கிராமங்களில் புத்தொழில் திட்டம் துவக்கம்
/
'ஸ்டார்ட் அப்' கிராமங்களில் புத்தொழில் திட்டம் துவக்கம்
'ஸ்டார்ட் அப்' கிராமங்களில் புத்தொழில் திட்டம் துவக்கம்
'ஸ்டார்ட் அப்' கிராமங்களில் புத்தொழில் திட்டம் துவக்கம்
ADDED : ஜன 01, 2026 06:49 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'ஸ்டார்ட் அப்' கிராமங்களுக்கு புத்தொழில் திட்டத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் 100 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, 100 'ஸ்டார்ட் அப்'களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு தேர்வாகும் கிராமங்களுக்கு புத்தொழில் திட்டம் மூலம் தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'ஸ்டார்ட் அப்' கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ள சாத்தனுார் மற்றும் நாரணம்பட்டிக்கு புத்தொழில் திட்டத்தை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். இத்திட்டம் பற்றிய கூடுதல் விபரங்களை https://gtp.startuptn.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். நிகழ்ச்சியின் போது, 'ஸ்டார்ட் அப்' திட்ட அலுவலர்கள் செந்தமிழன், விபித், ஆர்.கே.எஸ்., கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், துணை முதல்வர் ஜான்விக்டர், கிராம பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

