/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புளிய மரத்தில் பைக் மோதி ஆட்டோ டிரைவர் பலி
/
புளிய மரத்தில் பைக் மோதி ஆட்டோ டிரைவர் பலி
ADDED : நவ 03, 2024 04:28 AM

ரிஷிவந்தியம்: பாவந்துாரில் சாலையோர புளிய மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் இறந்தார்.
ரிஷிவந்தியம் அடுத்த வெங்கலத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சதீஷ்குமார், 25; ஆட்டோ டிரைவர். இவர், நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில் ஹீரோ ேஹாண்டா பேஷன் புரோ பைக்கில், ரிஷிவந்தியத்தில் இருந்து பாவந்துார் வழியாக கீழ்பாடி நோக்கிச் சென்றார். பாவந்துார் பஸ் நிறுத்தம் அருகே 'லிப்ட்' கேட்ட அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செம்மலை மகன் இளையராஜா, 34; என்பவரை சதீஷ்குமார் தனது பைக்கில் ஏற்றிச் சென்றார்.
சிறிது துாரத்திலேயே சதீஷ்குமார் ஓட்டிச் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சதீஷ்குமாருக்கு தலையில் பலத்த காயமும், இளையராஜாவின் கை, காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
உடன் இருவரும் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.