ADDED : செப் 28, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் சென்டர் மீடியன் தடுப்புக் கட்டை மீது ஆட்டோ மோதிய விபத்தில் வெல்டர் இறந்தார்.
சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தலைச் சேர்ந்தவர் ராஜா, 45; வெல்டர். இவர், நேற்று முன்தினம் சின்னசேலத்தில் இருந்து ஆட்டோவில் சேலம் மார்க்கமாக சென்றுள்ளார். அப்போது, ராஜாவின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியன் தடுப்புக் கட்டை மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயமடைந்த ராஜா சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
