தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கூழாங்கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


ADDED : செப் 28, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கூழாங்கற்கள் கடத்திய 2 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த நைனாகுப்பம் அருகே கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தது. அதன் பேரில் மாவட்ட சுரங்கத்துறை உதவி பொறியாளர் மற்றும் புவியியல் அலுவலர் ரகுநாத்குமார், 31; நேற்று முன்தினம் இரவு சம்பவ இடத்திற்கு சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் படியாக வந்த 2 லாரிகளை நிறுத்தினர். லாரியை நிறுத்தி விட்டு டிரைவர்கள் தப்பியோடி தலைமறைவாயினர்.

லாரியை சோதனை செய்ததில், கூழாங்கற்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது. அதன் பேரில் 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து உளுந்துார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us