ADDED : ஜூன் 23, 2025 09:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
காவல்துறை சார்பில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமை தாங்கி பேசினார்.
முகாமில், விழிப்புணர்வு குறித்த வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மகளிர் போலீசார் கோகிலா, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.