ADDED : செப் 23, 2024 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் காதுகேளாதோர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கிய ஊர்வலத்தை, கலெக்டர் பிரசாந்த் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட காதுகேளாத மாற்றுத் திறனாளிகள் காதுகேளாதவர்களை நட்புறவுடன் நடத்துவது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
ஊர்வலம், நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று மந்தைவெளி பகுதியில் முடிந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி, காதுகேளாதோர் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.