/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மத்திய கூட்டுறவு வங்கியில் கடனுதவி வழங்க விழிப்புணர்வு கூட்டம்
/
மத்திய கூட்டுறவு வங்கியில் கடனுதவி வழங்க விழிப்புணர்வு கூட்டம்
மத்திய கூட்டுறவு வங்கியில் கடனுதவி வழங்க விழிப்புணர்வு கூட்டம்
மத்திய கூட்டுறவு வங்கியில் கடனுதவி வழங்க விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஆக 26, 2025 07:25 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் உள்ள விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி வழங்குவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் அபிராமி தலைமை தாங்கினார். மேலாளர் ராஜா, கிளை மேலாளர் சுமதி முன்னிலை வகித்தனர்.
வங்கியில் கணக்கு வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள் கறவை மாடு வாங்கவும், கடை வைத்து சுய தொழில் மேற்கொள்ளவும் குறைந்த வட்டி விகிதத்தில் ரூ.25 ஆயிரம் முதல் கடனுதவி வழங்கப்படுகிறது.
இதில், ரூ.25 ஆயிரம் கடன் பெற ஒரு நபர் ஜாமின், ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் கடன் பெற 2 நபர்கள் ஜாமின் அளிக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்து முன்னேறுவதற்காக வங்கி சார்பில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.