/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 20, 2025 07:07 AM

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) குப்புசாமி தலைமை தாங்கினார். பேராசிரியர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் ரிஷிவந்தியம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், வெங்கடேசன் ஆகியோர் காவலன் செயலியின் பயன்பாடுகள் குறித்தும், போதைப்பொருட்கள் ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமத்துவ கல்வி, மனநலம் குறித்தும் பேசினர்.
வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து ரிஷிவந்தியம் கால்நடை மருத்துவர் நிறைமதி பேசினார்.
கல்லுாரியின் போதைப்பொருள் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சண்முகம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ரமேஷ், ரமணி, செல்வராஜ், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கவுரவ விரிவுரையாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.

