தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூலை 24, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த கனியாமூர் டி.எஸ்.எம்., கல்வியியல் கல்லுாரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லுாரி தாளாளர் மனோகர்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மகாலட்சுமி வரவேற்றார். துணை முதல்வர் ராமு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தாசில்தார் வெங்கடேசன் பங்கேற்று, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் அவசியம் குறித்தும், இப்பணியில் கல்லுாரி மாணவர்களின் தன்னார்வலர்களாக இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, கணக்கெடுப்பு நடத்தும் முறை குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், பேராசிரியர்கள் தேவி, செல்வம், பிரபாகரன், அர்ச்சனா, ஒருங்கிணைப்பாளர் சிவராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேவி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us