/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழை நீர் சேகரிக்கும் கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
/
மழை நீர் சேகரிக்கும் கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
மழை நீர் சேகரிக்கும் கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
மழை நீர் சேகரிக்கும் கட்டமைப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 10, 2025 11:04 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்தி பராமரிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து மின்னணு திரையில் விழிப்புணர்வு குறும்படம் மற்றும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
மழைநீரை சேகரிப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும், கோடை கால தேவைக்கும் இன்றியமையாத பயன்பாடு குறித்தும், ஒவ்வொரு வீடுகள், வணிக நிறுவனங்கள் மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்தி முறையாக பராமரித்து மழைநீரை சேகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அவசியம் குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி, காணொலி குறும்படம் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம குடிநீர் திட்ட கோட்டத்தின் நிர்வாக பொறியாளர் ஆனந்தன், உதவி பொறியாளர்கள் கவுசல்யா, பிரியதர்ஷினி, மாவட்ட நிலநீர் ஆய்வாளர் பிரேமா, பள்ளி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

