/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணி குறித்து பயிற்சி
/
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணி குறித்து பயிற்சி
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணி குறித்து பயிற்சி
வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணி குறித்து பயிற்சி
ADDED : நவ 10, 2025 11:04 PM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணி பயிற்சி நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, விழுப் புரம் மாவட்டம், திருக்கோவிலுார் சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொண்டு உள்ளனர். இதில் முதல் கட்டமாக வீடு வீடாக சென்று அதற்கான படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கியுள்ளனர். அதனை பூர்த்தி செய்து திருப்பி வாங்குவது குறித்த பயிற்சி திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
திருக்கோவிலுார் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங் தலைமை தாங்கி ஆலோசனைகள் வழங்கினார்.
திருக்கோவிலுார் தாசில்தார் சரவணன், கண்டாச்சிபுரம் தாசில்தார் முத்து முன்னிலை வகித்தனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர் கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.