/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : ஜூலை 24, 2025 10:02 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கிற்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் தங்கவேலு வரவேற்றார். டீன் அசோக் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினர் தனியார் கம்யூட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் ருத்வான் மற்றும் பயிற்சியாளர் யாசின் ஆகியோர் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம், செயல்பாடுகள், எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி குறித்தும், ஏ.ஐ., டூல்ஸ் மற்றும் ரோபோடிக்ஸ் குறித்து பேசினர். கருத்தரங்கில், உதவி பேராசிரியைகள் கார்த்திகா, பாரதி, சந்திரபிரியா, அன்பரசன், கயல்விழி, ேஹமவர்த்தினி, விமலாஜென்சி, மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கணினி அறிவியல் துறைத்தலைவர் சக்திவேல் நன்றி கூறினார்.