/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மின்வாரியத்தில் 93 மனுக்களுக்கு தீர்வு
/
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மின்வாரியத்தில் 93 மனுக்களுக்கு தீர்வு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மின்வாரியத்தில் 93 மனுக்களுக்கு தீர்வு
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மின்வாரியத்தில் 93 மனுக்களுக்கு தீர்வு
ADDED : ஜூலை 24, 2025 10:02 PM
கள்ளக்குறிச்சி;உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மின்வாரிய துறை மூலம் 93 கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கடந்த 15ம் தேதி முதல் நடந்து வருகிறது.
மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் பல்வேறு இடங்களில் நடந்த முகாமில் எரிசக்தித் துறையின் கீழ் மின்சார வாரியம் தொர்டர்பாக மின் இணைப்பு பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 192 மனுக்கள் பெறப்பட்டது.
இதில் 92 மின் இணைப்பு பெயர் மாற்றம் மனுக்கள், ஒரு மின் கட்டண மாற்றம் தொடர்பான மனு என மொத்தம் 93 மனுக்களின் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் 24 புதிய மின் இணைப்பு மனுக்கள், 74 மின் இணைப்பு பெயர் மாற்றம் மனுக்கள், ஒரு மின் கட்டண மாற்றம் என மொத்தம் 99 மனுக்கள் தொடர் நடவடிக்கையில் உள்ளது.
நிலுவை மனுக்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி நகராட்சி 19வது வார்டு ஈஸ்வரன் அளித்த மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு ஆணை வழங்கியதால், தமிழக அரசுக்கு நிறைந்த மனதுடன் நன்றி தெரிவித்தார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 46 சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதால், சிறப்பு முகாம்களை உரிய முறையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.