/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : அக் 12, 2025 10:33 PM

கள்ளக்குறிச்சி; ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் உலக மனநாள் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே. எஸ்., கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார்.
கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் முன்னிலை வகித்தார். வணிக மேலாண்மை துறை தலைவர் ராஜா வரவேற்றார். கள்ளக்குறிச்சி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சுப்ரமணியன், செயலாளர் அருண்கென்னடி வாழ்த்துரை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி சுகாதார பணிகள் இணை இயக்குநர் மாலினி, மனநல மருத்துவர் பிரவீனா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, இளம் பருவத்தினரிடையே ஏற்படும் மனநல சிக்கல்கள், அதனை கையாளும் முறை, உடல் நலம், மனநலன் குறித்து சிறப்புரையாற்றினர்.
மேலும், தகவல் அறியும் உரிமைச்சட்டம் மற்றும் அதன் நுணுக்கங்கள் குறித்தும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
உதவி பேராசிரியர் பவுலின் சங்கீதா நன்றி கூறினார்.