/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : அக் 15, 2025 11:19 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் உலக இளைஞர் தின நாளை முன்னிட்டு எய்ட்ஸ் மற்றும் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு முதல்வர் சரண்யா தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் மேகலை வரவேற்றார். உதவி பேராசிரியர் லோகு வாழ்த்துரை வழங்கினார். மேலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய காசநோயாளிகள் சிகிச்சை மேற்பார்வையாளர் கதிரேசன், காசநோய் குறித்தும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஐ.சி.டி.சி., ஆலோசகர்கள் கச்சிராயப்பாளையம் உதயசங்கரி, மேலுார் பூபதி ஆகியோர் பங்கேற்று எய்ட்ஸ் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியை உதவிப் பேராசிரியர்கள் ராணி, ஷர்மிளா தொகுத்து வழங்கினர். உதவி பேராசிரியர் பவுலின் சங்கீதா நன்றி கூறினார்.